சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம்
கடியாபட்டி நகரத்தார் ஊர்களில் 76 ல் புள்ளி கணக்கு வரிசைபடி 7 வது பெரிய ஊர், சுமார் 875 புள்ளிகள் உள்ள கடியாபட்டியில் சுமார் 300 புள்ளிகள் சென்னையில் மட்டுமே வாழ்வது ஒரு தனி சிறப்பு, எப்படி 76 ஊர்களில் 7 வது இடத்தில் இருக்கிறதோ அதே விகிதாச்சார படி சென்னை வாழ் நகரத்தார் சங்கங்களிலும் சசென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம் 7 வது இடத்திலேயே இருக்கும்.
கடியாபட்டியில் நகரத்தார்கள் பல ஊர்களில் இருந்து வந்து 18 வது நூற்றாண்டின் துவக்கத்தில் குடியேறி நகரத்தார்களுக்கே உரிய முறையில் மளிகை போல் வீடுகளை கட்டி விஸ்வநாதபுரம், இராமசந்திரபுரம், பழையூர் என்று மூன்று பகுதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
விஸ்வநாதபுரம் பகுதி விஸ்வநாத அய்யர் என்பரிடம் இருந்த நிலங்களை நகரத்தார்கள் விலை கொடுத்து வாங்கி ஒவ்வொரு மனையும் சுமார் 12,000 சதுர அடி மனைகளாக பிரித்து வீடுகளை கட்டினார்கள், சிறிய கோவிலாக இருந்த சிவன் கோவிலை பராமரித்து வந்த விஸ்வநாத அய்யர் கடியாபட்டி நகரத்தார்கள் ஊருக்கு நடுவில் தனியாக சிவன் கோவில் கட்ட இடம் ஒதுக்கி (தற்பொழுது குமுளாங்குடி பிள்ளையார், அய்யப்பன் கோவில், சங்கு இருக்கும் இடம்) கட்ட தயாராக இருந்த பொழுது சிறிய கோவிலாக இருந்த சிவன் கோவிலை பராமரித்து வந்த விஸ்வநாத அய்யர் கடியாபட்டி நகரத்தார்களின் ஆன்மீக அறபணிகள் மீது நம்பிக்கை வைத்து தான் பராமரித்து வந்த சிறிய கோவிலை கடியாபட்டி நகரத்தார்கள் வசம் ஒப்படைத்தார்கள், உடனே அதை கடியாபட்டி நகரத்தார்கள் பொதுவில் பெற்று 1842 ஆம் ஆண்டு மிக பெரிய கோவிலாக கல்மண்டபமாக கட்டி பொன், பொருள், அற்புதமான பிரமாண்டமான வெள்ளி வாகனங்கள், நகரத்தார் நகர கோவில் அனைத்தையும் விட மிக பெரிய தேர், இவைகள் அனைத்தையும் 1842 ஆண்டு வாக்கி சுமார் நான்கு 4 லட்சம் ரூபாயை அப்பொழுது வாழ்ந்த கடியாபட்டி நகரத்தார்கள் 250 குடும்பங்களிடம் பெற்று இந்த திருபணியை செய்து முதல் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
கடியாபட்டியில் வயிரவன் கோவில் இரணிக்கோவில், இரணியூர், மாத்தூர், பிள்ளையார்பட்டி கோவில் இவைகளை சார்ந்த நகரத்தார்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை ராஜ்ஜியத்தின் 7 வது மன்னரான ராமசந்திர தொண்டைமான் அவர்கள் வழங்கிய இடத்தை மனை பிரிவுகளாக பிரித்து ராமசந்திரபுரம் என்னும் பெயரில் கடியாபட்டியின் ஒரு பகுதியாக இருக்கிறது.
புதுக்கோட்டை ராஜ்ய அரசாங்கத்தில் கணக்கராக பணிபுரிந்த விஸ்வநாத அய்யரிடம் இருந்து விலைக்கு வாங்கிய பகுதி மனை பிரிவுகளாக பிரிக்கபட்டு விஸ்வநாதபுரம் என்று அழைக்கபட்டு கடியாபட்டியின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு இருக்கிறது.
பழையூர் கடியாபட்டியின் முதல் முந்தய பகுதி என்பதால் அது பழையூர் என்று அழைக்கபடுகிறது.
கடியாபட்டி நகர சிவன் கோவில் 10 நாள் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் நடைபெறும். இந்த திருவிழா கணகிடைக்காத ஒரு பிரமாண்டமும் அழகும் ஆன்மீகமும் விளக்கும் திருவிழா.
கடியாபட்டி நகர சிவன் கோவில் பூமிநாத சுவாமி பிரம்ம வித்தியா அம்பாள் திருதலம் ஒரு வாஸ்து பரிகார திருதலம், மனையில் உள்ள பிரச்சனைகள், வீடு கட்ட இங்கு வந்து சாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு அந்த வீபூதியை மனையில் தூவி விட்டால் போதும் உங்கள் வீடு மற்றும் மனை கனவு நனவு ஆகும் என்பது உறுதி.
கடியாபட்டி கைத்தறி புடவைகள் நெய்வதில் பெயர் பெற்ற ஊராக இருந்தது,
திருவண்ணாமலை, பாடலீஸ்வரர் கோவில் (கடலூர்), வைத்தீஸ்வரன் கோவில் போன்ற சிவ தலங்களில் மிக பெரிய ஆன்மீக திருபணிகளை செய்தவர்கள் கடியாபட்டியயை சேர்ந்த தீ.சொ குடும்பத்தாரும், பி.கு. குடும்பத்தாரும் என்பது தனி சிறப்பு.
கடியாபட்டி உலகப்பர் மேல்நிலைபள்ளி 100 ஆண்டுகளை கடந்து இன்றும் மிக சிறப்பாக இன்றும் கல்வி பணி ஆற்றி வருகிறது, பல அறிஞர்கள் குன்றகுடி அடிகளார், சதாசிவம் அய்யர் போன்றோர் இங்கு கல்வி பயின்றவர்களே, பல வெளி நாட்டு வாழ் நகரத்தார்கள், தொழில் அதிபர்களை உருவாக்கிய பள்ளி கடியாபட்டி உலகப்பர் மேல் நிலை பள்ளி.
ஊருக்கு நடுவில் இருக்கும் பழையூர் ஊரணி ஒரு தனி சிறப்பு
அருள்மிகு காடத்தநாச்சி அம்மன் கோவில், மற்றும் கொப்பாத்தாள் கோவில்கள் தற்பொழுது நகரத்தார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் மூலம் திருபணி செய்யபட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யபட்டது,
கடியாபட்டி காவல் தெய்வமான காடத்தநாச்சி அம்மன் கோவில் திருவிழாவே முதல் திருவிழாவாக சித்திரை வைகாசி மாதங்களில் நடைபெறும்.
அருகில் இருக்கும் இளஞ்சாவூர் கோவிலுக்கு கடியாபட்டி நகரத்தார்களின் பங்களிப்பும் மிக அதிகம். சுமார் 80 ஆண்டுகள் முன்பு தீ.சொ. குடும்பத்தார்களால் இளஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பெரிய அளவில் திருபணிகள் செய்யபட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்டது.
காடத்தநாச்சி அம்மன் என்று வரும் இடத்தில் நான் உங்களுக்கு அனுப்பிப காடத்தநாச்சி அம்மன் போட்டோவை போடவும்
கல்வி மற்றும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் கடியாபட்டி ஆரோக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை, கடியாபட்டியில் மஞ்சள் காமாலைக்கு கொடுக்கபடும் மருந்து உலக பிரசித்தி பெற்றது என்றே சொல்லலாம்.
நகரத்தார்கள் மிக அதிக அளவில் வழிபடும் சாத்தாங்கோவில் என்ற அய்யனார் கோவிலும் கடியாபட்டிக்கு மிக அருகிலேயே இருக்கிறது,
கடியாபட்டியில் மல்லுபட்டி வகையறா நகரத்தார் குடும்பத்தார் வழங்கிய இடத்தில் தற்பொழுதய அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இயங்கி வருகிறது.
கடியாபட்டி நகரத்தார்கள் நன்கொடை வழங்கி பல சோலார் திருவிளக்குககளை பொது மக்கள் பயன்பாட்டுக்காக அமைத்து இருக்கிறார்கள்
கடியாபட்டி விஸ்வநாதபுரத்தில் இருக்கும் பி.கு வகையறா பிள்ளையார் கோவில் அதன் ஊரணியும் இந்த 2022 ஆண்டு 100 வது ஆண்டு என்பதும் தனி சிறப்பு
கடியாபட்டி விஸ்வநாதபுத்தில் இருக்கும் பி.கு. வகை நகரத்தார்களால் தொடங்கபட்ட தொடக்கபள்ளி 100 வது ஆண்டை நோக்கி இன்று கல்வி பணியாற்றி வருகிறது.
நகரத்தார்கள் பூசை போடுவதும் முன்னோர்களுக்கு படைப்பதும் தொன்று தொட்டு ஒரு பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வு, இதற்க்கு 6 பூசை / படைப்பு வீடுகளும் இருக்கிறது.
கடியாபட்டி சிவன் கோவிலுக்கு அருகில் மையாடி அம்மன் சந்தி வீரப்ப சாமி கோவிலும் இருக்கிறது, இது கடியாபட்டியை சேர்ந்த இரணிக்கோவில்
நகரத்தார்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.
மேலும் ராமசந்திரபுரத்தில் நகரத்தார்களால் நடத்தபடும் சுப்பையா பூசை வைக்கும் கோவிலும் 100 வருடங்களை கடந்து அருள் வழங்கி வருகிறது
கடியாபட்டி தீ.சொ குடும்த்தாரின் அரண்மனை போனற வீடு இன்று சிதம்பர விலாஸ் என்ற பெயரில் நட்சத்திர தங்கும் விடுதி (Star Hotel) ஆக தனி அடையாளமாக தமிழர்கள் மட்டும் இன்றி பல வெளிநாட்டினரும் வந்து தங்கி மகிழ்ந்து செட்டிநாட்டு பாரம்பரியம், ஆன்மீகம் திருத்தலங்கள், உணவு அகியவைகளையும் பார்த்து, பருகி பரவசபட்டு செல்கிறார்கள்
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருமெய்யம் என்னும் திருமயம் அனந்த சயன சத்திய மூர்த்தி பெருமாள் கோவிலும் அதை சார்ந்த சுற்றுலா தளமான புகழ் பெற்ற கோட்டையும் கடியாபட்டி அருகிலேயே அமைந்துள்ளது
மத்திய அரசு நிறுவனமான பெல் BHEL நிறுவனம், மற்றும் தனியார் அ.மு.மு (Murugappa Group) நடத்தும் கடல்பாசியில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் கடியாபட்டிக்கு மிக மிக அருகில் தான் இயங்குகிறது.
கடியாபட்டியை சுற்றி பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியர் கலை கல்லூரிகள், பாலிடெக்னிக்குள் என்று நிறைய கல்வி நிறுவனங்கள் தற்பொழுது வந்து விட்டன,
கடியாபட்டி அந்த காலம் முதல் இன்று வரை வாழ தகுந்த ஒரு சொர்க்க பூமி (Smart Village) என்பதில் இன்னும் என்ன சந்தேகம், தூய காற்று, ஆன்மீகம், ஆரோக்கியம், விவசாயம், கல்வி இது தானே மனிதன் பூமியில் தேடுவது,
என்ன பாரம்பரியம், ஆன்மீகம், ஆரோக்கியம், கல்வி இவைகளில் சிறந்து விளங்கும் கடியாபட்டிக்கு உடனே சுற்றுலா சென்று வரலாம் என்று தோன்றுகிறதா,
வாருங்கள் கடியாபட்டி உங்களை வரவேற்கிறது
தகவல்
நா.சித.அடைக்கலவன்
தலைவர்
சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம்